Home » செங்கமலக்கண்னன் DSP பணி ஓய்வு விழா – திரளான அதிரையர்கள் கலந்து கொண்டு வாழ்த்து !

செங்கமலக்கண்னன் DSP பணி ஓய்வு விழா – திரளான அதிரையர்கள் கலந்து கொண்டு வாழ்த்து !

by
0 comment

அதிராம்பட்டினம் முன்னாள் காவல் ஆய்வாளராக பணியாற்றியவர் செங்கமலக்கன்ணன், இவரது பணிக்காலத்தில் 0℅ வழக்குகள் இன்றி அதிரை நகரை கட்டுக்குள் வைத்து கொண்டார்.

பின்னர் இட மாறுதல் செய்யப்பட்டு பல்வேறு ஊர்களுக்கு இட மாறுதலில் சென்ற அவர் DSPயாக பதவி உயர்வு பெற்று பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளராக திறம்பட பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் இன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார் அதற்கான அரசு ஆனையை காவல் இலாக்கா வெளியிட்டது. அதன்படி இன்று பட்டுக்கோட்டை தனியார் அரங்கம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பணி ஓய்வு பெறும் செங்கமலக் கண்ணன் DSPக்கு பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

அதிராம்பட்டினம் அரசியல் கட்சிபிரமுகர்கள், இயக்க பிரதிநிதிகள், அதிரை முன்னாளத சேர்மன் SH. அஸ்லம், தமுமுக மாநில செயலாளர் அஹமது ஹாஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

இதே அதிராம்பட்டினம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் மற்றும் SDTU பட்டுக்கோட்டை SDPI கட்சியினர், ஊடகவியலாளர் A.ரஜபுமுகைதின் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினர்.

பட்டுக்கோட்டை ஆட்டோ சங்க உரிமையாள, ஓட்டுனர்கள் கலந்து கொண்டு பணி ஓய்வு பெற்ற DSPக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter