அதிரை SSM குல் முஹம்மது நினைவாக 22ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 27 ம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி கடற்கரை தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற போட்டியில் கெளதியா 7’s நாகூர் – திண்டுக்கல் அணிகள் களம் கண்டன.
நாகூர் அணி அதிரை ரசிகர்களின் பலத்த கர ஒலிகளுக்கு மத்தியில் களமிறங்கி ஆட்டத்தின் துவக்கத்தில் தனக்கு கிடைத்த அத்தனை கோல் வாய்ப்புகளையும் வீண் செய்தது.
முதல் பகுதி நேர ஆட்ட முடிவில் இரு அணிகளும் கோல் ஏதும் போடாமல் சமநிலையில் ஆடி முடித்தது.
இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில் திண்டுக்கல் அணி தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயனபடுத்தி தனது முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றது.
ஆட்டம் முடிவதற்கு 5 நிமிடம் மீதமிருக்கையில் நாகூர் அணி தனது முதல் கோலை அடித்ததும் ஆட்டம் உச்சகட்ட பரபரப்படைவதற்குள் போட்டி 1 – 1 என கோல் கணக்கில் சமநிலையுடன் ஆட்டம் முடிவுற்றது.
இதனால் டை – பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது.
அதிரை கால்பந்து தொடர் வரலாற்றில் கெளதியா 7’s நாகூர் அணி தனது முதல் நாக்-அவுட் சுற்றிலேயே வெளியேறி இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.