ஓகி புயலால் காணாமல் போன தமிழக மீனவர்களை மீட்டெடுக்க கோரியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண ஏற்பாடு செய்ய கோரியும் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் அதிரை பேருந்து நிலையத்தில் நாளை(15/12/2017) மாலை 5மணியளவில் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்.நல்லதுரை கண்டன உரையாற்ற உள்ளார். இந்த ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் கட்சி பட்டுகோட்டை சட்டமன்ற தொகுதி சார்பில் நடைபெறுவது குறிப்பிடதக்கது.