Home » வக்ப் வாரிய தலைவர் மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!

வக்ப் வாரிய தலைவர் மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!

by admin
0 comment

தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவர் அப்துர் ரஹ்மான் மீது அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில மீனவ பேரவை பொதுச்செயலாளர் தாஜூதீன் கோரிக்கை.

நேர்மையாகவும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு திறம்பட வக்பு வாரியத்தை தலைமை பொறுப்பு ஏற்று நடத்தி வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து பாராளுமன்றத்தில் சிறப்பாக கருத்துக்களை எடுத்துரைத்து முன்மாதிரி MP என்ற அந்தஸ்த்துடன் பல பாராட்டுக்களை பெற்ற கல்வியாளர், மார்க்க அறிஞர், அன்பு சகோதரர் EX MP ஜனாப் அப்துல் ரகுமான் மீது காழ்ப்புணர்வு கொண்டு அவருடைய சிறப்பான முன்னெடுப்புகளை தாங்க முடியாத முன்பிருந்த தலைவர்களால் வக்பு சொத்துக்களை தவறான வழிகளில் தவறான முறையில் சொந்தமாக்கிக் கொண்டு மீண்டும் அதே முறையில் களமாட வந்தவர்களை விரட்டி அடிக்கும் விதமாக சிறப்பாக சமுதாய மக்களுக்கு ஏற்றவாறு கல்வி, வேலை வாய்ப்புகள், மற்றும் சொத்துக்களை மீட்டு எடுப்பதிலும் இன்னும் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவர முன்னேற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் வாரிய தலைவர் சகோதரர் EX MP அப்துல் ரகுமான் மீது சேற்றை வாரி இறைக்கும் நபர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தை சிறப்பாகவும் நேர்மையாகவும் மக்களுக்கு தேவையான திட்டங்களையும் எதிர்கால இளைஞர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு ஏதுவான திட்டங்களையும் ஒன்றிய அரசின் பாராமுக ஆட்சியாளர்களின் ஏதேச்கார அதிகார அத்துமீறல்களையும் சிறுபான்மை சமுதாய மக்களை ஒழிக்கும் விதமாக செயல்பட்டு வருவதையும் தாண்டி சிறப்பான திராவிட மாடல் ஆட்சி தந்து செயல்பட்டு வரும் நமது தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் நேர்மையான ஆட்சிக்கு ஏற்ப அவரால் தேர்வு செய்து சிறப்பாக வக்பு வாரியத்தை தலைமை ஏற்று நடத்தி வருபவர் சகோதரர் அப்துல் ரகுமான் அவர்களை நமது சமுதாய மக்கள் மட்டுமல்ல மாற்று மத சகோதரர்களும் பாராட்டி வருகிறார்கள் இதை பொறுக்காதவர்கள் பழைய மாதிரி இயங்க முடியாமல் ஏற்கனவே வக்பு வாரியத்தை சுரண்டி படு குழியாக்கி சென்றவர்களும், பழைய தலைவர்களால் உருவாக்கப்பட்ட நேர்மை தவறும் சில அதிகாரிகளால் தான் இது போன்ற செயல்களுக்கு வடிவம் கொடுத்து கெட்ட பெயரை ஏற்படுத்தும் புல்லுருவிகள் ஆவர். அந்த மாதிரி லஞ்சத்திற்கு ஆட்படும் அதிகாரிகளை களையெடுத்து அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்வதுடன், நேர்மையாகவும் திறமையாகவும் அப்பழுக்கற்ற முறையில் சிறப்பாக செயலாற்றும் வாரிய தலைவர் எப்போதும் போல் செயல்பட வாழ்த்தி இறைவன் அருளால் வாரியம் ஓங்கி வளர்ந்து தமிழக முதல்வர்அவர்களுக்கும் புகழ் சேர்க்க வும் வாரிய தலைவர் அவர்களை கேட்டுக் கொண்டு இந்த சமுதாயம் உங்களுக்கு எப்போதும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு
எ.தாஜுதீன்,
ஐக்கிய ஜமாத் தலைவர், பேராவூரணி தொகுதி, பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு மீனவர் பேரவை, மல்லிப்பட்டினம்,
தஞ்சாவூர் மாவட்டம்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter