அதிரை புதுமனை தெருவில் உள்ள சம்சுல் இஸ்லாம் சங்க அலுவலகத்திற்கு வருகைபுரிந்த பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரையை சங்க தலைவர் முகம்மது சாலிஹ், துணை தலைவர் சரபுதீன், இளைஞர் அமைப்பு தலைவர் முகம்மது தம்பி ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். இதனிடையே சும்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாக்குட்பட்ட பகுதிகளில் முறையான சாலை, கழிவுநீர் வசதிகள் இல்லாததை சுட்டிக்காட்டிய நிர்வாகிகள், அந்த பகுதிகளுக்கு புதிய வரிவிகிதம் அதிகமாக இருப்பதாக கூறினர். மேலும் அதிக வரியை குறைப்பதுடன் புதிதாக நூலகம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கைவிடுத்தனர். இந்த சந்திப்பின்போது சங்க நிர்வாகிகள், தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொருளாளர் எஸ்.எச்.அஸ்லம் உள்ளிட்ட முஹல்லாவாசிகள் உடனிருந்தனர்.
More like this

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!
அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...

மல்லிப்பட்டினத்தில் சாலை விபத்து,சம்பவ இடத்திலேயே இருவர் பலி.
மல்லிபட்டினம், டிசம்பர் 14: இன்று மாலை பெட்ரோல் பங்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் அதிவேகமாக இரு சக்கர...





