Home » ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா காலமானார்!

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா காலமானார்!

0 comment

ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 46. தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் முக்கியப் பிரமுகருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் முதல்முறையாக களமிறங்கிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகனும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளருமான திருமகன் ஈவெரா பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். இதையடுத்து தொகுதிப் பணிகளில் தீவிரமாக செயலாற்றி வந்த அவர் சட்டமன்ற நிகழ்வுகளிலும் ஆர்வமுடன் பங்கேற்று வந்தார். 46 வயதே ஆகும் இவர் சென்னையிலிருந்து நேற்று முன் தினம் ஈரோட்டுக்கு வந்திருக்கிறார்.

இந்நிலையில் இன்று அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் ஈரோட்டில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் திருமகன் ஈவெரா உயிரிழந்து விட்டதாக கூறியதை அடுத்து அவரது உடல் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இவருக்கு பூர்னிமா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இவரது தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சற்று கடுகடுவென பேசக்கூடியவராக இருப்பினும் கூட திருமகன் ஈவெரா எல்லோரிடமும் சிரித்த முகத்துடன் அன்பொழுக பேசக்கூடியவர்.

தமிழகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவெராவின் மரணச் செய்தியை அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கும், ராகுல்காந்திக்கும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தெரியப்படுத்தியுள்ளது.

திருமகன் ஈவெராவின் திடீர் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சித்தலைவர்களும், எம்எல்ஏ-க்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter