Wednesday, March 18, 2026

அதிரையில் ரயில் நிற்கும்! அதிகாரிகள் உத்திரவாதம்! மறியல் போராட்டம் ஒத்திவைப்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

தாம்பரம்-செங்கோட்டை அதிவிரைவு ரயில் அதிரையில் நிற்காது என்ற ரயில்வே இலாக்காவின் முடிவு அதிரை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து ரயில் மறியல் போரட்டத்தை அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவை அறிவித்து இருந்தது.

இந்த போராட்ட அறிவிப்பை தொடர்ந்து நல்வாழ்வு பேரவை நிர்வாகிகளை தனித்தனியாக போன் செய்து போராட்ட அறிவிப்பு குறித்தும் ரயில்வே அதிகாரிகள் மேல் மட்டத்தில் அதிராம்பட்டினம் நிறுத்தம் தொடர்பாக தொடர் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும், அதிரையில் விரைவாக ரயில் நிறுத்தம் செய்ய போதுமான நடவடிக்கைகளை திருச்சி கோட்ட மேலாளர் எடுத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகளின் நம்பகத்தன்மையான உறுதி மொழியை ஏற்று இந்த ரயில் மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் படுவதாக அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவையினர் தெரிவிக்கின்றனர்.

அதன்படி அதிகாரிகள் மெத்தனப்போக்காக நமது நிறுத்ததை புறக்கணித்தால் ஒட்டுமொத்த மக்களையும் திரட்டி வழுவான போரட்டத்தை முன்னெடுக்க நேரிடும் என எச்சரித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img