Thursday, March 19, 2026

அதிராம்பட்டினம் நகர முஸ்லீம் லீக்கின் புதிய நிர்வாகிகள் தேர்வு !

spot_imgspot_imgspot_imgspot_img

தாம்பரம்-செங்கோட்டை-தாம்பரம் அதிவேக ரயில் அதிராம்பட்டினத்தில் நின்று.செல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் நகர நிர்வாகிகள் தேர்வு ஆயிஷா மகளிர் அரங்கில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் A.அப்துல்காதர் தலைமையில் நடைபெற்ற, இக்கூட்டத்தில் நகர தலைவராக வழக்கறிஞர் முனாஃப் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்.

செயலாளராக வழக்கறிஞர் Z முகம்மது தம்பி அவர்களும் பொருளாளராக ஷேக் அப்துல்லாஹ் அவர்கள் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.முன்னதாக ஷேக்தாவூத் மிஸ்பாகி அவர்கள்.இறைமறை வசனங்களுடன் நிரவாக தேர்வு துவங்கியது.

முன்னதாக வரவேற்பு உரையை மாவட்ட பிரதிநிதி ஜமால் நிகழ்த்தினார்.நன்றியுரை நகர செயலாளர் z .முகம்மது தம்பி நிகழ்த்தினார்.

இக்கூட்டத்தில் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் தாம்பரம் -செங்கோட்டை-தாம்பரம் அதிவேக ரயில் நின்று செல்ல வேண்டும் என சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கட்சிக்காக உழைத்து மறைந்த KSA அப்துல் ரஹ்மான் மற்றும் நகர தலைவர் KK ஹாஜா அவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நகர நிர்வாக கூட்டத்தில் ஏராளமான முன்னாள் இந்நாள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img