அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 28ம் ஆண்டு நடத்தும் SSM குல் முகம்மது நினைவு 23ம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டி கடந்த 12/06/2023 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.
இதில் நேற்று நடைபெற்ற ஐந்தாம் நாள் ஆட்டத்தில் கலைவாணர் 7s கண்டனூர் அணியினரும் அஸ்லம் ஸ்போர்ட்ஸ் கிளப் கூத்தாநல்லூர் அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இவ்வாட்டத்தில் சிறப்பாக விளையாடிய கலைவாணர் 7s கண்டனூர் அணி 7-0 என்ற கோல் கணக்கில் அஸ்லம் ஸ்போர்ட்ஸ் கிளப் கூத்தாநல்லூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இன்றைய தினம்(17/06/2023) ஆட வேண்டிய அணிகள் :
வெஸ்டர்ன் FC அதிரை vs இளையான்குடி 7s இளையான்குடி
இடம் : கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானம்