அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 28ம் ஆண்டு நடத்தும் SSM குல் முகம்மது நினைவு 23ம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டி கடந்த 12/06/2023 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.
இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கலைவாணர் 7s கண்டனூர் அணியினரும் யுனைடெட் 7s நாகூர் அணியினரும் மோதினர். ஆட்டத்தின் ஆரம்பம் முதலே தாக்குதலை தொடங்கிய கண்டனூர் அணி, முதல் பாதியில் 1 கோல் அடித்தது. பின்னர் நடைபெற்ற இரண்டாம் பாதியில் மேலும் 2 கோல் அடித்த கலைவாணர் 7s கண்டனூர் அணி, 3-0 என்ற கோல் கணக்கில் யுனைடெட் 7s நாகூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
நாளையதினம்(02/07/2023 விளையாட வேண்டிய அணிகள் :
டான் போஸ்கோ மதுரை vs கேமரூன் FC புதுக்கோட்டை
இடம் : கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானம்