அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 28ம் ஆண்டு நடத்தும் SSM குல் முகம்மது நினைவு 23ம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டி கடந்த 12/06/2023 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.
இதில் இன்று(18/07/2023) நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் பாலு மெமோரியல் திருச்சி அணியினரும் ESC அதிராம்பட்டினம் அணியினரும் மோதினர். ஆட்டத்தின் முதல் பாதியில் இரண்டு கோல் அடித்த பாலு மெமோரியல் திருச்சி அணி, வலுவான முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதி ஆரம்பித்ததும், சுதாரித்துக்கொண்ட ESC அதிராம்பட்டினம் அணி முதல் கோலை அடித்தது. பின்னர் ஆட்டத்தின் இறுதி நேரங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல் அடித்த ESC அதிராம்பட்டினம் அணி, 3-2 என்ற கோல் கணக்கில் பாலு மெமோரியல் திருச்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நாளையதினம்(19/07/2023) விளையாட வேண்டிய அணிகள் :
இரண்டாம் அரையிறுதி ஆட்டம் :
ராயல் FC அதிராம்பட்டினம் vs கலைவாணர் 7s கண்டனூர்
இடம் : கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானம்