Sunday, February 1, 2026

அதிரை: 6வது வார்டின் அவல நிலை – தேங்கிய நீரில் இடறி விழுந்த முதியவர் (வீடியோ)

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டடு சேர்மன் வாடியில் மழை நீர் தேங்கியுள்ளது. சாலை மேம்பாட்டு பணியில் போது பழையை சாலையை பெயர்த்து எடுக்காமல் அதன்மீதே சாலையமைத்ததால் வந்த வினை என அப்பகுதி மக்கள் புலம்பி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்றிரவு பெய்த மழையில் குட்டைபோல் நீர் தேங்கியுள்ளது, இதனால் பாதசாரிகள் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

இந்த நீரை கடக்கும் ஒவ்வொருவரும் அம்சத்துடன் கடக்க நேரிடுகிறது என அருகாமையில் உள்ள வியாபாரிகள் கூறுகின்றனர்.

அதன்படி இன்று அவ்வழியே இருசக்கர வாகனத்தில் கடந்த ஒரு முதியவர் மழை நீரில் இடறி விழுந்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அப்ப்குதியை சேர்ந்த செல்வம் என்பவர் கூறுகையில் 6வது வார்டில் உள்ள சமூக ஆர்வலர் ஊரில் நடக்கும் அத்தனை பிரச்சினைகளையும் படம் பிடித்து போடுகிறார் என்றும் இந்த மெகா பள்ளத்தாக்கு மட்டும் அவரின் கண்ணுக்கு புலப்படாதது வியப்பாக உள்ளது என்றார்.

ந்கராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் இடையில் நிற்கும் கால்வாய் பணிகளை முடித்திட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிகை விடுத்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img