Monday, March 23, 2026

தேர்தல் 24: முஸ்லீம் லீக்கிற்கு தஞ்சை தொகுதி?

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியை முஸ்லீம் லீக்கிற்கு ஒதுக்க வேண்டும்.

திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமை 2 சீட்டுக்கள் ஒதுக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

கடந்தமுறை இராமநாதபுரம் சிட்டிங் எம் பி நவாஸ் கனிக்கு மீண்டும் ஒதுக்க வேண்டும் என முஸ்லீம் லீக்கர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதவிர இராமநாதபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட உள்ளதாகவும் செய்திகள் வெளிவரத்த தொடங்கியுள்ளது.

அரசியல் காய் நகர்வுகளை பொறுத்து கடைசி நேர காட்சிகள் மாற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், தஞ்சை நாடாளுமன்ற தொகுதியை கூடுதலாக பெற முஸ்லீம் லீக் வியூகம் வகுத்தள்ளதாக தெரிகிறது.

அதிமுக கூட்டணியில் இருக்கும் தாமாகவுக்கு தஞ்சை நாடாளுமன்ற தொகுதி கிடைக்க உள்ள நிலையில், உள்ளூரில் பல்வேறு காரணங்களால் திமுகமீது கொண்ட வெறுப்பை வாக்காக மாற்ற திமுக தலைமை முடிவெடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் தஞ்சை நாடாளுமன்ற தொகுதியை தீர்மானிக்கும் சக்தியாக இஸ்லாமிய வாக்கு வங்கிகள் உள்ளதால் முஸ்லீம் லீக்கிற்கே திமுக பச்சைக் கொடி காட்டும் என கூறப்படுகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img