Wednesday, March 18, 2026

அதிரை: இந்தியன் வங்கியின் வீணாப்போன ATM – லேட் டெலிவரியால் குஷியான மர்ம நபர் – கைவிரித்த வங்கி?

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் இந்தியன் வங்கியில் ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். ATM இயந்திரமும் CDM இயந்திரமும் தலா ஒன்று உள்ளது அதிக வாடிக்கையாளர்களை கொண்ட இந்த கிளைக்கு இது போதாது.

அவ்வப்போது பழுதாகி ஷட்டர் சாத்தியிருப்பதை வாடிக்கையாளர்கள் புகாராக கூறி வருகிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, சில நேரங்களில் டெபாசிட் செய்யும் இயந்திரத்தில் டெபாசிட் செய்தால் முழுவதையும் உள் வாங்கி கொண்டு கணக்கில் ஏறுவதில் காலதாமதம் செய்ய்து விடும் அல்லது நீண்ட நேரத்திற்கு பின்னர் டெபாசிட் செய்யாமல் திருப்பியளித்து விடும்.

இதனையறியாத சிலர் டெபாசிட் ஆகிவிட்டது என திரும்பி விடுவர் பின்னர் அந்தப்பணம் நல்லோர்களால் வங்கியில் ஒப்படைத்த சம்பவமும் உண்டு.

முன்னதாக முயற்ச்சி செய்யப்பட்ட இயந்திரம் அசுவாசமாக எழுந்து வந்து பணத்தை நீட்ட பின்னால் வந்த மர்ம நபர் குஷியாக சுருட்டி சென்றிருக்கிறார்.

இரண்டு முறை கணக்கில் இருந்து பணம் காணாமல் போனது குறித்து சம்பந்தப்பட்ட வங்கிக்கு புகார் பறந்திருக்கிறது.

இதனையடுத்து CCTVயை ஆய்வு செய்ததில் மஞ்சள் டிசர்ட் போட்ட நபர் பணத்தை எடுத்து சென்றது தெரியவருகிறது.

படத்தை ஜூம் செய்து பார்த்த வகையில் பின்னால் அமர்ந்து செல்லும் நபர், கையில் ACக்கு பொருத்தும் ஸ்டெப்லேசர் வைத்திருக்கிறார்.ஆகவே AC மெக்கானிக் பணியில் ஈடுபடும் நபர்கள் இக்காரியத்தை செய்திருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img