Wednesday, March 18, 2026

சவூதி அரேபியா ஜித்தாவில் அய்டாவின் இஃப்தார் நிகழ்ச்சி.!! திரளான அதிரையர்கள் பங்கேற்பு..!

spot_imgspot_imgspot_imgspot_img

Adirai Youth Development Association (AYDA) அமைப்பின் சார்பில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் வெள்ளிக்கிழமை மாதந்திர கூட்டம் நடைபெறும், அதன் அடிப்படையில்  இன்று (15/03/2024) சவூதி அரேபியா ஜித்தாவில் ஷரஃபியா பகுதியில் உள்ள ஆரியாஸ் உணவகத்தில் மாதாந்திர கூட்டம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி அய்டா- வின் தலைவர் தமீம் அன்சாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்த இஃப்தார் நிகழ்வில் சவூதி அரேபியாவில் ஜித்தா, யான்பு, மக்கா, தாயிஃப் வாழ் அதிரையர்கள் சுமார் 200க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்டனர்.

இந்த இஃப்தார் ஒன்றுகூடல் நிகழ்வில் அதிரையை சேர்ந்த பெண்கள் சிறார்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் காயல்பட்டினம் சகோ. அப்துல் ரஹ்மான் இப்னு ஹைதர் அவர்கள் சமூக ஒற்றுமை மற்றும் சமூக மேம்பாடு குறித்து உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வின் மூலம் அதிரை பைத்துல்மால் சார்பில் வழங்கப்படும் ரமலான் கிட்டுக்கு 70/sar யை தாங்களின் பங்களிப்பை அய்டா நிர்வாகிகளிடம் வழங்கிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...
spot_imgspot_imgspot_imgspot_img