Wednesday, May 1, 2024

அதிரையில் இனி பந்தல் போட்டாலே வரி.! தலையாட்டி கவுன்சிலர்களால் நரக ஆட்சியாக மாறும் நகராட்சி!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகிறது. குறிப்பாக பேருந்து நிலையத்தில் இருக்க கூடிய 24 கடைகளை ரகசியமாக தங்களுக்கு வேண்டியவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் ஒதுக்கியது சர்ச்சையானது. அந்த வரிசையில் தற்போது காலிமனை வரி உயர்வுடன் புதிதாக பந்தல் வரி, பழைய வீடு இடித்தலுக்கான வரி, வேலி அமைத்தல் வரி, காம்பவுண்ட் வரி, வீடு கட்டுவதற்காக இறக்கி வைக்கப்படும் செங்கல், மணல் உள்ளிட்டவற்றுக்கு வரி என மக்களின் உழைப்பை வரி என்கிற பெயரில் உறுஞ்சு எடுக்க அதிரை நகராட்சி முடிவு செய்திக்கிறது.வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கும் இந்த வரி விதிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று அதிமுக நகர செயலாளர் பிச்சை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து நகராட்சி ஆணையரை நேரில் சந்தித்த அவர், புதிய வரி விதிப்பு சம்மந்தமாக மக்களின் ஆட்சேபனைகளை கேட்க எந்த பத்திரிகையில் விளம்பரம் செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஆணையர் சித்ரா சோனியா, மாலை தமிழகம் என்கிற (மக்களுக்கு பரிட்சயம் இல்லாத) பத்திரிகையில் விளம்பரம் செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கும் இந்த வரி விதிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று அதிமுக நகர செயலாளர் பிச்சை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து நகராட்சி ஆணையரை நேரில் சந்தித்த அவர், புதிய வரி விதிப்பு சம்மந்தமாக மக்களின் ஆட்சேபனைகளை கேட்க எந்த பத்திரிகையில் விளம்பரம் செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஆணையர் சித்ரா சோனியா, மாலை தமிழகம் என்கிற (மக்களுக்கு பரிட்சயம் இல்லாத) பத்திரிகையில் விளம்பரம் செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பிச்சை, வெளிப்படைத்தன்மை இல்லாத நகராட்சியின் செயல்பாடுகளை கண்டித்ததோடு உடனடியாக அதிரை ஜமாத்கள், கிராம பஞ்சாயத்துகள் உள்ளிட்ட அனைத்து இயக்கங்களும் புதிய வரி விதிப்புக்கு தங்களது ஆட்சேபனையை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்களிடம் வீட்டு வரி, குடிநீர் கட்டணத்தை வசூல் செய்ய தினமும் வீடுவீடாக ஆட்களை அனுப்புவதுடன், ஆட்டோ விளம்பரம் செய்யும் அதிரை நகராட்சி, முக்கியத்துவம் வாய்ந்த பந்தல் வரி உள்ளிட்டவற்றில் மக்களின் கருத்துக்களை கேட்க ஏன் ஆட்டோ விளம்பரம் செய்யவில்லை என்றும் விபரம் அறிந்த பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...