Tuesday, June 24, 2025

அதிமுக கூட்டணியில் திண்டுக்கல்லில் களம் காண்கிறது எஸ்டிபிஐ!

spot_imgspot_imgspot_imgspot_img

நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி என மும்முனை போட்டி நிலவுகிறது. நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது.

அதிமுக கூட்டணியில் தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம், புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் இன்று காலை தொகுதி பங்கீடானது இறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி, திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்கும் கையெழுத்திட்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...

நெருங்கும் ரமலான் – பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க தமிழ்நாடு அரசு ஆணை!

ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்கிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு...
spot_imgspot_imgspot_imgspot_img