தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி என மும்முனை போட்டி நிலவுகிறது. அதன்படி பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் இம்முறை தஞ்சாவூர் தொகுதியில் பாஜக நேரடியாக களமிறங்குகிறது. இன்று பாஜக தேசிய தலைமை தமிழகத்தில் போட்டியிடக்கூடிய அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டு 5.85% சதவீதம் வாக்குகளை பெற்று அப்போதைய அதிமுக வேட்பாளர் பரசுராமனிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.