தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கிழக்கு நகர திமுக அலுவலகத்திற்கு அக்கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர் முரசொலி வருகைதந்தார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்பு முதன்முறையாக அலுவலகம் வரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்காமல் ஒப்பாரி வைக்காத குறையாக சிலர் புழம்பி தள்ளியுள்ளனர். அப்போது 17வது வார்டு கவுன்சிலரான காங்கிரஸ் முகைதீன் என்கிற முகைதீன் பிச்சை கனி, தேர்தல் பிரச்சார வாகனத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான கா.அண்ணாதுரையை ஏற்ற கூடாது என்று வேட்பாளரிடம் மிரட்டல் தொனியில் கூறியவுடன் தேர்தலுக்கு யாரும் உழைக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார். இதனை சற்றும் எதிர்பார்க்காத வேட்பாளர் முரசொலி, செய்வதறியாது திகைத்து நின்றார். இதனிடையே அலுவலகம் தேடி வந்த தலைமையால் அறிவிக்கப்பட்ட வேட்பாளரை அவமரியாதை செய்யும் வகையில் மிரட்டல் தொனியில் பேசிய முகைதீன் மீது கட்சி தலைமை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தொண்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தை தஞ்சாவூரில் துவக்கி இருக்கிறார். காலையில் வாக்கிங் சென்றவாறு பொதுமக்களிடம் வேட்பாளர் முரசொலிக்காக உதயசூரியன் சின்னத்தில் அவர் வாக்கு சேகரித்தது தமிழக முழுவதும் எதிரொலித்து வருகிறது. இந்த சூழலில் குறுகிய காலத்தில் SDPI, காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் என்று ஒவ்வொரு கட்சியாக தாவி தற்போது திமுகவில் தஞ்சமடைந்திருக்கும் முகைதீன், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு தொடர்ச்சியாக கட்சிக்கு கலங்கம் ஏற்படுத்தி வருவதாகவும் விபரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
