அதிரை எக்ஸ்பிரஸ்:- முத்தலாக் சட்டத்தில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் இஸ்லாமிய பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைத்துள்ளதாகவும்
ஹஜ்ஜுக்கு செல்லும் பெண்கள் ஆண் துணை உடன் தான் பயணிக்க வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டு இருப்பதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்
இந்திய பிரதமர் இந்தியாவின் முன்னேற்றத்தில் அக்கரை செலுத்துகின்றாரோ இல்லையோ ஆனால் இஸ்லாமிய பெண்களுக்கு சுதந்திரம் பெற்று தருவதில் அதிகம் அக்கரை செலுத்தி கொண்டிருப்பதாக ஒரு மனநோய் பிரம்மையில் அன்றாடம் ஒளரி கொண்டுள்ளார்
ஒருவர் ஒரு சமுகத்திற்காக குரல் கொடுக்கிறார் அல்லது போராடுகிறார் என்று சொன்னால் அந்த சமூகம் தான் அவரை தலை மேல் தூக்கி வைத்து உச்சி பாராட்ட வேண்டும்
ஆனால் எந்த சமுதாயத்தின் சுதந்திரத்திற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி குரல் கொடுப்பதாக அடிக்கடி மீடியாக்களில் ஒளரி கொண்டுள்ளாரோ அந்த சமுதாய பெண்கள் அவரை பார்த்து ஏளனமாக சிரிப்பதையும் கண்டிப்பதையும் கடுமையாக எதிர்ப்பதையும் தான் அன்றாடம் பரவலாக காண முடிகின்றது
காரணம் இஸ்லாத்தை பின்பற்றி நடக்கும் எவரும் இங்கு இஸ்லாமிய சட்டத்தை குறை கூறவில்லை மாறாக நரேந்திர மோடிக்கும் அவரது குடும்ப பெண்களுக்கு இஸ்லாம் தான் சிறப்பான வாழ்கை நெறியை இஸ்லாமே காட்டும் என்றே பிரச்சாரம் செய்து வருகின்றனர்
முத்தலாக் முறையில் அரிதாக சில விவகாரங்கள் நடைபெறுகிறது என்று சொன்னால் அது இஸ்லாத்தை அறியாத முஸ்லிம்களால் நடை முறை படுத்தப்படுகிறதே தவிர இஸ்லாத்திற்க்கும் அந்த நடை முறைக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை காரணம் 14 நூற்றாண்டுக்கு முன்பே நபிகள் நாயகம்( ஸல்) அவர்களும் முத்தலாக் எனும் முறையை கடுமையாக கண்டித்துள்ளனர்
வாதத்திற்க்கு முத்தலாக் விவகாரத்தை ஏற்று கொண்டாலும் அது முஸ்லிம் சமுகத்திற்க்கும் இஸ்லாத்திற்க்கும் உள்ள தனிப்பட்ட விவகாரம்
இதில் இஸ்லாத்திற்க்கு எதிரியாகவும் பல்லாயிரகணக்கான அப்பாவி முஸ்லிம்களை படு கொலை செய்து வரும் நரேந்திர மோடிக்கு என்ன தொடர்பு ? என்ன அக்கரை ?
ஒரு வேளை முத்தலாக் முறையை வெறுக்கும் பெண்கள் இஸ்லாமிய சமூகத்தை விட்டோ அல்லது இஸ்லாத்தை விட்டே செல்வதற்க்கு எந்த தடையும் முஸ்லிம் சமூகத்தில் இல்லை
இஸ்லாத்தில் இருப்பதும் விலகி செல்வது ஒவ்வொருவரின் தனிப்பட்ட சுதந்திரம் இதில் பீஜேபி அரசாங்கத்திற்க்கு என்ன அக்கரை ?
இந்து மதத்தை சார்ந்த மக்களே ஜாதி கொடுமையால் பல விதங்களில் இன்னல்களை இந்தியா முழுதும் சந்தித்து வரும் சூழலில் அதை கண்டு கொள்ளாது இந்து மதத்தை பாதுகாப்பதாக கூறி போலி அரசியல் நடத்தும் பீஜேபி அரசாங்கத்திற்க்கு என்ன அக்கரை
பிரதமர் நரேந்திர மோடி அவருக்குரிய வேலையை மாத்திரம் உருப்படியாக பார்த்தால் போதுமானது
நோட்டை மாற்றினால் நாட்டையே மாற்றி விடலாம் என்று உலகமே எள்ளி நகையாடும் சட்டத்தை போட்டு இந்தியாவின் வளத்தையும் பொருளாதாரத்தையும் நாசப்படுகுழியில் தள்ளி விட்டு அதை சாதனையாக ஒளரி வரும் நரேந்திர மோடிக்கு முஸ்லிம் சமூகத்தில் மானம் உள்ள ஒருவரும் ஆதரவு இல்லை என்பதை அறிந்து கொள்ள முயற்சிக்கட்டும்
அவரின் பிசப்பு வார்த்தைகளால் இந்து சமுதாயத்தை சார்ந்த சிலர்கள் ஏமாந்து வருவதை போல் முஸ்லிம் சமூக பெண்களும் அவரின் பிசப்பு வார்த்தையை கேட்டு ஏமாறுவார்கள் என்று நரேந்திர மோடி நினைத்தால் நிச்சயம் நரேந்திர மோடி தான் கோமாளியாக போவார்
يُرِيدُونَ أَن يُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَيَأْبَى اللَّهُ إِلَّا أَن يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ
அல்லாஹ்வின் ஒளியை தனது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர்(தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை பூரணம் செய்வான்
அல்குர்ஆன் 9-32
நட்புடன் J . இம்தாதி