அதிராம்பட்டினம் 11 வார்டுக்கு உட்பட்ட முத்தம்மாள் தெருவில் உள்ள பழமையான கட்டிடம் ஆரம்ப காலத்தில் கயிறு உற்பத்திக்காக தொடங்கப்பட்டது. பிறகு சிறு பிள்ளைகளின் சத்துணவு கூடமாக செயல்பட்ட பழைமையான இக்கட்டிடம் இடியும் தருணத்தில் உள்ளது. அவ்வழியே குழந்தைகள், பொதுமக்கள் செல்லும் போது அவர்களுக்கு கட்டிடம் இடிந்து விடும் என்ற பயம் ஏற்படுகிறது. மேலும் கட்டிடத்தின் ஒருபகுதி இரவில் இடிந்து விழுந்ததால் மக்ககளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை.கட்டிடம் முழுமையாக இடிவதற்கு முன் இது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், இந்த கட்டிடத்தை இடித்து மக்களின் நலன் காக்க வேண்டும். என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.