அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன.
இதனை புதிய வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,என்றும் SIR படிவம் கிடைக்கப்பெறாதவர்கள் இந்த முகாமில் உள்ள சிறப்பு படிவத்தை பெற்று பூர்த்திசெய்து வழங்கிட வேண்டும் என கேட்டு கொள்ளப்படுகிறது.
மேலும்,இந்த முகாமில் ஃபார்6 ,6A உள்ளிட்டவற்றுடன், வெளிநாட்டு வாக்களர்கள், அதற்குண்டான படிவத்தை பூர்த்தி செய்து தங்களின் வாக்குரிமைகளை தக்கவைத்து கொள்ள கேட்டு கொள்கிறோம்.
புதிய வாக்காளர்கள் தங்களின் பிறப்பு சான்று,பள்ளி மாற்றுச்சான்று உள்ளட்ட அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை கொடுத்து தங்களை இணைத்து கொள்ள வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிரை நகரம் வேண்டுகோள் விடுக்கிறது.








