அதிராம்பட்டினம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துகள் அதிகரித்துள்ளன. கூட்டமாக அமர்ந்து வாகனங்கள் நிலைதடுமாற்றம் ஏற்படுத்துவதாக நகராட்சி கூறுகிறது.
இந்த விபத்துக்களுக்கு காரணம் மாடு வளர்ப்பவர்கள் கவனிக்காததே காரணம் என நகராட்சி நிர்வாகம் கருதுகிறது.
இந்நிலையில், நேற்று அதிராம்பட்டினம் ரயில்வே இருப்பு பாதையில் மேய்ந்து கொண்டிருந்த 12 மாடுகள் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்ததை தொடர்ந்து, அதிராம்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் மாடு பிடிக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. மாடு வளர்ப்பவர்கள், பொதுமக்கள் கவனம் செலுத்துமாறு நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.









