-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்-
பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக உள்ள த.மா.கா., பட்டுக்கோட்டை உள்பட 12 தொகுதிகளை அ.தி.மு.க.விடம் கோரியதாகவும், விரைவில் பரிசீலிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு திரு. வாசன் அவர்களின் எம்.பி. பதவி முடிவடைய உள்ளது. இதனால் அ.தி.மு.க., த.மா.கா.க்கு ஒதுக்குவதா, ஒட்டு வங்கியாக உள்ள தே.மு.தி.க.வுக்கு கொடுப்பதா என குழப்பத்தில் தவிக்கிறது.திரு. வாசன் அவர்களின் சமீபத்திய பேட்டியில், “ஆளும் கட்சி, எதிர்க் கட்சிகளுக்கு இணையாக எங்கள் பணி நடைபெறுகிறது” என்று கூறியது, இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவையாக டி.வி. சேனல்கள் செய்திகளில் வெளியிட்டன. கடந்த முறை தோல்வியைத் தழுவிய த.மா.கா.க்கு ஒதுக்காமல், இழந்த தொகுதியை மீண்டும் கைப்பற்ற அ.தி.மு.க. நேரடியாக களமிறங்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
பி.ஜே.பி.யின் 52 இடங்களைக் கொண்ட பட்டியலில் பட்டுக்கோட்டை இல்லை; பாதி கூட கிடைப்பது சந்தேகம்தான். தி.மு.க., மீண்டும் கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்காமல் தனித்து போட்டியிட வாய்ப்புள்ளது. போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் யார், யார் என விரைவில் தெரியும்…








