அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.
வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத் தரிசிக்க இந்து பக்தர்கள் மாலை அணிந்து, பயபக்தியுடன் நோன்பு நோற்பது வழக்கம். முன்னதாக பம்பையில் நீராடி, வாவர் மசூதியில் வணங்கி, அங்கிருந்து மலையில் உள்ள ஐயப்பரைத் தரிசிப்பர்.பக்தர்களின் பயணம்இவ்வாண்டும் அதிராம்பட்டினத்திலிருந்து கேரளா சபரிமலையை நோக்கி பயணிக்கும் பக்தர்கள், வேளாங்கண்ணி-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலை விரும்பிப் பயன்படுத்துகின்றனர்.
இன்று அந்த ரயிலில் 15-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பயணம் மேற்கொண்டனர்.புனித பயணத்தை மேற்கொள்ளும் பக்தர்களை வழியனுப்ப,பக்தர்களின் குடும்பத்தினருடன் அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் சங்க பி.ஆர்.ஓ. ஹசன் உடன் சென்றார்.








