Friday, March 20, 2026

தஞ்சையில் திமுக தலைமையில் மனிதசங்கிலி போராட்டம்.,தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்ப்பு..!!

spot_imgspot_imgspot_imgspot_img

 

தமிழக முழுவதும் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் மற்றும் மத்திய மாநில அரசைக் கண்டித்து பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகள் சார்பாக போராட்டம் ஆர்ப்பாட்டம் வெடித்து வருகிறது.

இந்நிலையில், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் தோழமை கட்சிகள் ஒன்று இணைந்து மத்திய மாநில அரசை கண்டித்து இன்று(23/04/18) தஞ்சாவூரில் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

இந்த மனித சங்கிலி போராட்டத்தில் மறுமலர்ச்சி திமுக பொது செயலாளர் வைகோ, மனித நேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை பாதுஷா, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில துணை தலைவர் அதிரை நசுருதீன், திமுகவை சேர்ந்த பாலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதுமட்டுமின்றி, இந்த போராட்டம் தமிழக முழுவதும் திமுக தலைமையில் தோழமை கட்சிகள் இணைந்து இன்று மாலை 4 மணி முதல் 5 மணிவரை மனிதசங்கிலி போராட்டத்தில் கைகளை கோரத்தப்படி அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!(படங்கள்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வர இருக்கும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை...

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்பாட்டம்!

ஒன்றிய அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நேற்று (ஆக.17) சென்னை மாவட்ட ஆட்சியர்...
spot_imgspot_imgspot_imgspot_img