Thursday, March 19, 2026

அதிரை எக்ஸ்பிரஸின் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

ஒரு ஏழை ஒருவன் ஜென் துறவியைப் பார்க்கச் சென்றான்.

அவரைப் பார்த்து, “குருவே! நான் பெரும் ஏழை. என்னிடம் என் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லை. நான் ஒரு நல்ல வசதியுடன் வாழ வழி சொல்லுங்கள்” என்று கேட்டான்.

அதற்கு குரு அவனிடம், “நான் 5000 தருகிறேன், உன் கைகளை என்னிடம் வெட்டிக் கொடு” என்று சொன்னார்.
அவன் என்னால் 5000 ரூபாய்க்காக என் கைகளை இழக்க முடியாது என்று கூறினான்.
“சரி, நான் உனக்கு 15,000 ரூபாய் தருகிறேன், உன் கால்களை கொடு” என்றார். அதற்கும் அவன் ஒப்புக் கொள்ளவில்லை.
“வேண்டுமென்றால் 50,000 ரூபாய் தருகிறேன், உன் கண்களையாவது கொடு” என்று கேட்டார்.
அதற்கும் அவன் முடியாது என்றான்.

உனக்கு இருபது லட்சம் வேண்டுமென்றாலும் தருகிறேன்,
உன் உயிரைக் கொடு என்றார்.

அதற்கு அந்த ஏழை, என்னால் நிச்சயம் நீங்கள் சொல்வதை செய்ய முடியாது என்று கூறினான்.

அதைக் கேட்ட அந்த குரு அவனிடம்,
“உன்னிடம் உன் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லை, மேலும் எவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்தாலும் கொடுக்க விரும்பாத விலை மதிப்பற்ற உயிரை கொண்டுள்ள நீ எவ்வாறு ஏழை ஆக முடியும். ஆகவே உழைத்து வாழ்க்கையில் முன்னேறு” என்று கூறினார்.

விலைமதிப்பில்லாத நம் உழைப்பு ஒன்று போதும் வாழ்வை ஜெயிக்க…

இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!!!

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

அதிரை சஹன் அரசியல்: ‘கூட்டணி’ இல்லையேல் ‘சோறு’ இல்லை!

​அதிராம்பட்டினத்தில் இன்று மிகப்பெரிய விவாதமே "சஹன் கூட்டணி" தான். ஒரு சஹனுக்கு 3 பேர் அல்லது 4 பேர் என கணக்கு இருப்பதால்,...

லண்டன் உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த Dr....

​மனித உரிமைகள் பாதுகாப்பிலும், சமூக சேவையிலும் ஒரு உன்னதமான அடையாளமாகத் திகழும் லயன் Dr. SRK. அசன் முகைதீன் BA, D. Litt....
spot_imgspot_imgspot_imgspot_img