Friday, March 20, 2026

சென்னையை ஓடவிட்ட கங்கை!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் நடத்தும் 15 ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கால்பந்து தொடர் போட்டி கிராணி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை – சிவகங்கை அணிகள் மோதின.

முன்னதாக இவ்வாட்டத்தை காதிர் முஹைதீன் முன்னால் உடற்கல்வி ஆசிரியர் ராமசந்திரன், மதுக்கூர் கலாம் அவர்கள், கிராம நிர்வாகிகள் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

முன்னால் சாம்பியனான சென்னையும், நாகூரில் 1லட்சம் மதிப்பிலான தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சிவகங்கையும் விளையாடுவதினால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

அந்த எதிர்பார்ப்பிற்கு ஏற்ப இரு அணி வீரர்களும் மிகத் துல்லியமாக செயல்பட்டனர்.

ஆட்டம் ஆரம்பித்த 10வது நிமிடத்தில் சென்னை அணி முதல் கோலை பதிவு செய்ய, அடுத்த 15வது நிமிடத்தில் பதிலுக்கு சிவகங்கையும் கோல் அடித்தது.

முதல் பகுதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் சமநலையில் ஆடி முடித்தனர்.

பின்னர் இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில் மீண்டும் சென்னை அணி கோல் அடிக்க, அடுத்தடுத்து சிவகங்கை அணி 3 கோல்களை அடித்தது.

இறுதியில் சிவகங்கை அணி 4-2 என்ற கோல் கணக்கில் சென்னையை வீழ்த்தியது.

இருப்பினும் இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் சலைத்தவர்கள் அல்லர் என்பதை இப்போட்டி நிரூபித்தது.

நாளைய தினம் தென்னரசு பள்ளத்தூர் – சிவகங்கை அணிகள் காலிறுதியில் சந்திக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img