Thursday, March 19, 2026

போதைக்கு அடிமையாகும் அதிரை இளைஞர்கள்… மீட்டெடுக்க நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம்..![படங்கள்]

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருள் உபயோகிக்கும் பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி இளைஞர்களை குறிவைத்து, அவர்களுக்கு போதை பொருட்களை விற்பனை செய்து, அவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் வேளையில் ஒரு சில சமூக விரோத விஷமிகள் திட்டமிட்டு செய்து வருகின்றனர்.

இதனையடுத்து போதை பழக்கத்திற்கு அடிமையாகி வரும் இளைஞர்கள் குறித்து ஆலோசனை செய்வதற்காக அதிரையில் உள்ள அனைத்து முஹல்லாவாசிகள் ஆலோசனை கூட்டமானது கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்றது.

அதேபோல் அதிரையில் தொடர்ந்து போதை பழக்கத்திற்கு ஆளாகி வரும் இளைஞர்களை அதிலிருந்து மீட்டெடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை அஸர் தொழுகை முடிந்தவுடன் அதிரை கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளியில் நடைபெற்றது.

அஸர் முதல் மக்ரிப் தொழுகை வரை நடைபெற்ற இக்கூட்டத்தில் போதை பழக்கத்திற்கு ஆளான இளைஞர்களை மீட்பது குறித்து அதிரைவாசிகளிடம் கருத்து கேட்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டது. இதில் முந்நூறுக்கும் மேற்பட்ட அதிரையர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img