Monday, February 2, 2026

தேனியை வீழ்த்திய கண்டனூர்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் (AFFA) சார்பாக 16 ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கால்பந்துத் தொடர் போட்டி இன்று (21-06-2019) வெள்ளிக்கிழமை மாலை கிராணி மைதானத்தில் தொடங்கியது.

AFFA தொடரில் தினசரி 2 போட்டிகள் நடைபெறுவதால் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் ஆவலும் தொற்றிக் கொண்டது.

முன்னதாக இன்றைய முதல் நாள் போட்டியை ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் MSM.அபூபக்கர், மன்சூர் அதிரை பட்டிமன்ற பேச்சாளர் அன்னா சிங்காரவேலு, தரகர் தெரு ஜமாஅத் சார்பாக முஹைதீன் மற்றும் AFFA நிர்வாகிகள் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

முதலாவது போட்டியில் மார்க்ஸ் மன்னார்குடி – VVFC மனச்சை அணிகள் மோதின.

இப்போட்டியின் இறுதியாக டை பிரேக்கரில் மார்க்ஸ் மன்னார்குடி 4 – 3 கோல் கணக்கில் VVFC மனச்சை அணியை வீழ்த்தியது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் Sports Fanatics தேனி – கலைவாணர் 7’s கண்டனூர் அணிகள் மோதின.

சம பலம் வாய்ந்த இரு அணிகளும் வெற்றிக்காக வரிந்துக்கட்டிய போதும் தனது சாமர்த்தியமான ஆட்டத்தால் கண்டனூர் அணி 1 – 0 கோல் கணக்கில் தேனி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

நாளைய தினம்(22/06/2019) 3 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அவை :

AFC ஆலத்தூர் – பட்டுக்கோட்டை 7s பட்டுக்கோட்டை

ரியாளத் 7s பொதக்குடி – MFC மேலநத்தம்

அதிரை AFFA சீனியர் – அத்திவெட்டி 7s அத்திவெட்டி

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img