Friday, March 20, 2026

மிரட்டிய நாகூர் : வெளியேறிய வேலங்குடி!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை SSMG நினைவாக 19 ம் ஆண்டு மற்றும் அதிரை இளைஞர்கள் கால்பந்து கழகம் 25 ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்துத் தொடர் போட்டி அதிரை கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இன்றைய தினம் இரண்டு போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி 18 வது நாளான இன்று முதல் போட்டியில் அதிரை SSMG – Udhayam FC புதுக்கோட்டை அணிகள் மோதின.

அடுத்த சுற்று செல்வதற்கு இரு அணிகளும் கடுமையாய் உழைத்தாலும் அதிரை SSMG அணி 1 – 0 என்கிற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் கௌதியா 7’s நாகூர் – Blues வேலங்குடி அணிகள் களம் கண்டன.

ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் முதல் கோலை தங்கள் வசமாக்க வரிந்து கட்டிக் கொண்டு விளையாடினர்.

இருப்பினும் தனது அருமையான ஆட்டத் திறனால் நாகூர் அணி எதிரணியின் யுக்திகளுக்கு முட்டுக்கட்டை போட்டது.

இறுதியாக 1 – 1 என்கிற கோல் கணக்கில் சம நிலையில் ஆட்டம் முடிவுற்றதால் ‘டை – பிரேக்கர்‘ முறை கடைபிடிக்கப்பட்டது.

இதில் நாகூர் அணி 7 – 6 என்கிற கோல் கணக்கில் வேலங்குடி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றதோடு காலிறுதி சுற்றுக்கும் தகுதி பெற்றது.

நாளைய தினம் கலைவாணர் 7’s கண்டனூர் – உதயம் FC திருச்சி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img