Monday, March 23, 2026

MKN ட்ரஸ்ட்டிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை அதிரை பேரூராட்சி பளார் !!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நீர்நிலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் நகரில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தொக்காலிக்காடு ஏரியில் இருந்து சேண்டாகோட்டை வழியாக பம்பிங் முறையே நீர்கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நீர் கொண்டு வரும் வழி 5அடி ஆழமும் சுமார் அரை கிலோ மீட்டர் அகலமும் கொண்ட நிலப்பரப்பு அதிராம்பட்டினம் MKN ட்ரஸ்ட்க்கு சொந்தமான இடம் உள்ளது.

இவ்வழியாக நீர் கொண்டுவர நீர்நிலை பாதுகாப்பு இயக்கம் ட்ரஸ்ட் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தன, இதனை அடுத்து கல்லூரி தாளாளரிடம் பலமுறை தகவல் பெற முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில்,உள்ளூர் ஊடகமொன்றும், நாளிதழ் ஒன்றிலும் கல்லூரி நிர்வாகம் வக்பு வாரியத்தின் ஒப்புதலுடன் அனுமதி வழங்கி விட்டதென்றும் இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்தின் பார்வைக்கு கல்லூரி நிர்வாகம் அனுப்பி விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து வேளைகளை ஆரம்பிக்காத பேரூர் நிர்வாகத்திடம் விழக்கம் கேட்க நீர்நிலை பாதுகாப்பு இயத்தினர் சென்றுள்ளனர். அங்கிருந்த செயல் அலுவலர் ரமேஷ் அவர்களிடம் கேட்கப்பட்டது, அதற்கு அவர் பேரூர் நிர்வாகத்திடம் இது குறித்து எந்த அனுமதி கடிதமும் வரவில்லை என்றார்.

மேலும் நாளிதழ்,இணைய ஊடகத்தில் வந்துள்ள தகவல் உண்மை தன்மைக்கு மாற்றாக உள்ளது என நீர்நிலை பாதுகாப்பு இயத்தினரிடம் தெரிவித்தார்.

உன்மைத்தன்மையை அரிய நீர்நிலை பாதுகாப்பு இயக்த்தினர் கல்லூரிக்கு சென்றனர் தாளாளர்,முதல்வர் யாரும் அங்கு அலுவலகத்தில் இல்லை என நீர்நிலை பாதுகாப்பு இயக்கத்தினர் வேதனை அடைந்துள்ளனர்.

திடீரென கல்லூரி முன் ஏராளமானோர் திரண்டதால் கல்லூரிச்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img