Monday, February 2, 2026

சென்னையில் பத்தாயிரம் பேர் மீது போலீசார் வழக்குபதிவு…!

spot_imgspot_imgspot_imgspot_img

சென்னை ஆலந்தூரில் நேற்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய 10 ஆயிரம் பேர் மீது பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

சென்னையில் நேற்று தவ்ஹீத் ஜமா அத் பிரமாண்ட போராட்டம் நடத்தினர். ஆலந்தூரில் இருந்து ஆளுநர் மாளிகையை நோக்கி அவர்கள் பேரணியாக சென்ற நிலையில், அவர்கள் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

பல்லாயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், போராட்டம் நடத்திய 10 ஆயிரம் பேர் மீது பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிமுன் அன்சாரி, ஜவாஹிருல்லா உட்பட 10000 பேர் மீது அனுமதியின்றி கூடுதல், சட்டத்துக்கு புறம்பாக போராட்டம் செய்தல் ஆகிய இரண்டு பிரிவின் கீழ் பரங்கிமலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img