Sunday, February 8, 2026

அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி வடமாநில தொழிலாளர்களுக்கு உடனடியாக உணவு வழங்கிட உத்தரவிட்ட சார் ஆட்சியர்…

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினத்தில் வடநாட்டு தொழிலாளர்கள் கட்டிட பணி உள்ளிட்ட இதர பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களில் பீகார்,உபி,ஜார்கண்ட் பகுதிகளில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் அதிரையில் தங்கி பணி செய்து வருகின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையால் போடப்பட்ட ஊரடங்கில் வேலையிழந்து தங்குமிடங்களிலேயே முடங்கினர்.

இதனால் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

முன்னதாக அரசால் வழங்கப்பட்ட உணவு பொருட்கள் போதுமானதாக இல்லை என்றும் அது வழங்கிய சில நாட்களிலேயே தீர்ந்து விட்டது என்றும் கூறினர்.

இதனை அதிரை எக்ஸ்பிரஸ் காணொளியுடன் கூடிய செய்தியை பதிந்தது.

இது காட்டுத்தீ போல பரவி ஆட்சியரின் கவனத்திற்கும் சென்றுள்ளது.

இதன் தொடர்ச்சியாக அதிரைக்கு விஜயம் செய்த சார் ஆட்சியர் வடநாட்டவர்கள் தங்கி இருக்கும் இடங்களுக்கு சென்று இன்று பிற்பகல் 2மணியளவில் நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது அவர்களிடம் உணவு சுகாதாரம் குறித்து விசாரித்தார்,அதில் அரசால் முன்னர் வழங்கப்பட்ட பொருள் போதுமானதாக இல்லை என்றும், எங்களுக்கான உணவு பொருட்களை வழங்க வேண்டும் என்றனர்.

மேலும் நாங்கள் சொந்த ஊருக்கு செல்ல வழிவகை செய்து ஊருக்கு அனுப்பி வைக்க கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் வட்டாட்சியர் அலுவலகம்.மூலம் உடனடியக உணவு பொருள்கள் வழங்கப்படும் என்றும், இதனை வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த திடீர் ஆய்வின் போது வருவாய் அதிகாரி,கிராம நிர்வாக அலுவலர், PFI தன்னார்வலர்கள் கட்டிட பொறியாளர்கள் சிலர் உடனிருந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img