Friday, March 20, 2026

குடும்ப பிரச்சனையால் அதிரை வந்த மூதாட்டி காவல் நிலையத்தில் ஒப்படைப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை அடுத்த மழவேனிற்காடு ஊராட்சியைச் சேர்ந்தவர் சந்திரா. மூதாட்டியான இவர், செல்போன் மூலம் ஆட்டோ வேண்டும் என அதிரை பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு கூறியுள்ளார். அந்த ஆட்டோ ஓட்டுனரும் மழவேனிற்காடு சென்று அந்த மூதாட்டியை தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அதிராம்பட்டினம் வந்துள்ளார்.

வரும் வழியில் ஆட்டோவில் இருந்த மூதாட்டி சந்திரா, ஆட்டோ ஓட்டுனரிடம் தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக கூறியுள்ளார். உடனே அதிர்ச்சி அடைந்த ஆட்டோ ஓட்டுநர், அந்த மூதாட்டியை அழைத்துக்கொண்டு தனது பேருந்து நிலைய ஆட்டோ சங்கத்தில் ஒப்படைத்து நடந்தவற்றை விரிவாக கூறியுள்ளார்.

உடனே பேருந்து நிலைய ஆட்டோ சங்க நிர்வாகிகள், மூதாட்டி வைத்திருந்த கைப்பையை வாங்கி பார்த்தபோது சுமார் அறுபத்தி ஐந்தாயிரம் மதிப்பு ரொக்கம் இருந்தது. இதையடுத்து உடனே மூதாட்டி சந்திராவை, பேருந்து நிலைய ஆட்டோ சங்க நிர்வாகிகள், அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் காவல் நிலையத்தில் இருந்து மழவேனிற்காடு ஊராட்சி மன்றத்தலைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரும் உடனே அதிராம்பட்டினம் காவல் நிலையம் வந்தடைந்தார். பின்னர் ஊராட்சி மன்றத்தலைவரிடம் மூதாட்டி சந்திராவை காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img