Home » வேளாண் சட்டத்தை எதிர்த்து அதிரையில் சுந்தரவள்ளி பேசுவதற்கு தடை போட்ட மமக : கொந்தளிப்பில் விவசாய பொதுமக்கள்!!

வேளாண் சட்டத்தை எதிர்த்து அதிரையில் சுந்தரவள்ளி பேசுவதற்கு தடை போட்ட மமக : கொந்தளிப்பில் விவசாய பொதுமக்கள்!!

by
0 comment

அதிராம்பட்டினத்தில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்றுமாலை 4மணியளவில் பேரூந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளன.

அனைத்து கட்சி, இயக்கத்தினர் பங்கு பெறும் வகையில் கட்டமைக்கப்பட்ட இப்போராட்டத்திற்கு தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க மாநில துணைத்தலைவர் தோழி சுந்தரவள்ளி கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்துவதாக ஒப்பு கொண்டு உள்ளார்.

இந்நிலையில், இதனை அறிந்த மமகவினர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் மூலமாக தூதனுப்பி அதிராம்பட்டினத்தில் நடக்கவிருக்கும் தமுமுகவின் போராட்டத்தில் கலந்து கொள்ள கூடாது என தடை விதித்து உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்து வேறுபாடுகள் ஆயிரம் இருந்தாலும் களமாட வரும் பேச்சாளரை தடுக்கும் அளவிற்கு என்ன நேர்ந்துவிட்டது என போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மற்ற கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விவசாயிகளுக்கான போராட்டத்திற்கு தானே வருகிறார்? இப்போராட்டம் யாருக்கானது? ஹைதர் அலியின் தனிப்பட்ட சுய லாபத்திற்காகவா இப்போராட்டம் நடத்தப்படுகிறது ஊருக்கே சோறு போடும் விவசாய நலனில் அக்கரை கொண்டு நடைபெறும் இப்போராட்டத்தை சிதைக்கும் நோக்கில் தடை விதித்து கீழ்த்தரமான அரசியல் செய்யும் அரசியல் வியாபாரிகளை வருகின்றன சட்டமன்ற தேர்தலில் சம்மட்டி அடி கொடுத்து வீழ்த்துவதற்கு இச்சமூகம் தயாராக இருக்கிறது என தமுமுகவின் மாநில துனை செயலாளர் அஹமது ஹாஜா நம்மிடம் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் இப்போராட்டத்தில் மாநில துனை தலைவர் கோவை செய்யது உள்ளிட்ட முக்கிய பேச்சாளர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்த உள்ளதாக தெரிவித்த அஹமது ஹாஜா இப்போராட்டத்தில் கட்சி பேதங்கள் இன்றி அனைவரும் கலந்து கொள்ள உள்ளதாகவும், அக்கட்சிகளை சார்ந்த தொண்டர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு வேளாண் சட்டத்தை அமல் படுத்த துடிக்கும்மத்திய அரசுக்கு எதிராக தமது கண்டனத்தை பதிவு செய்ய வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter