Thursday, May 2, 2024

‘கும்பமேளா, தேர்தல் பொதுக்கூட்டங்களை உச்சநீதிமன்றம் தடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது’ – சிவசேனா!

Share post:

Date:

- Advertisement -

ஹரீத்வார் கும்பமேளா மற்றும் மேற்கு வங்க தேர்தல் பொதுக் கூட்டங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் நடந்து கொண்டிருந்தால் இன்று நாட்டில் கொரோனா பரவல் இந்த அளவுக்கு மோசமான நிலைக்கு சென்றிருக்காது என சிவசேனா தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இரண்டாவது அலை மோசமாகி கொண்டே செல்கிறது. நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவி வருகிறது.

ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பெரும்பாலான நோயாளிகள் இறக்க நேரிடுகிறது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் தடுப்பூசி மற்றும் ஆக்ஸிஜன் விநியோகம் குறித்து மத்திய அரசின் திட்டம் என்ன என உச்சநீதிமன்றம் மத்திய அரசை கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த நிலையில் சிவசேனா கட்சியின் சாம்னா பத்திரிகையில் தலையங்கத்தில் மத்திய அரசை விமர்சித்து கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில் தடுப்பூசி மற்றும் ஆக்ஸிஜன் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் நேரடியாக தலையிட்டுள்ளது நல்லது.

எனினும் மேற்கு வங்கத் தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நடத்திய சாலை பொதுக் கூட்டங்களில் மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்ட தலைவர்களின் பிரச்சாரக் கூட்டங்களில் சுப்ரீம் கோர்ட் காலம் தாழ்த்தாமல் தலையிட்டிருக்க வேண்டும்.

மேலும் ஹரீத்வார் கும்ப மேளாவுக்கு சென்ற பெரும்பாலானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கும்ப மேளாவை சுப்ரீம் கோர்ட் தடுத்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் இன்று மக்கள் இறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள். டெல்லியில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் மக்கள் இறக்கிறார்கள்.

தலைநகர் டெல்லியிலேயே இத்தகைய நிலை என்றால் இதற்கு யார் பொறுப்பேற்பது? தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அஸ்ஸாம், புதுவை ஆகிய மாநில சட்டசபைத் தேர்தல்களில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக கொரோனாவின் இரண்டாவது அலையில் கவனம் செலுத்தியிருந்தால் நிலைமை இந்த அளவுக்கு மோசமாகியிருக்காது.

நரேந்திர மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும் இந்தியாவை சொர்க்க்பூமியாக மாற்ற விரும்பினார்கள். ஆனால் இன்று இந்தியாவே சுடுகாடாகிவிட்டது. கொத்து கொத்தாக இறந்தவர்களின் பிரேதங்கள் எரியூட்டப்படுவதை ஆங்காங்கே காண முடிகிறது என அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

அதிரையில் தொடர் வாகன விபத்து : மௌலானா அப்துல் ரஹீம் அவர்கள் மரணம்.!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...