தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றது.இந்த விபத்துகளுக்கு முக்கிய காரணம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது என சமூக ஆர்வலர்கள் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். இது போன்ற தொடர் விபத்துகளால் ஒன்றுமே அறியாத அப்பாவி பொதுமக்கள் காயமுற்று துடிதுடித்து மரணிக்கும் சம்பவம் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது.இது போன்ற விபத்துகள் இனி வரக்கூடிய காலங்களில் ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு அதிரையில் உள்ள மது கடைகள் முற்றிலும் மூடப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன், அதிரை காவல்துறை விபத்துக்கள் ஏற்படுவதை முற்றிலும் தடுப்பதற்கு எந்த வித கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதை கருத்தில் கொண்டும் மாபெரும் தொடர் போராட்டம் நடைபெற இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் தற்பொழுது வெளியாகியுள்ளது.பொதுமக்கள் பலர் இந்த போராட்டம் குறித்த அடுத்தகட்ட அறிவிப்பிற்காக காத்திருப்பதாகவும், இந்த போராட்டம் மூலம் அதிரையில் மதுக்கடையை மூட வேண்டும் எனவும் பலரும் தெரிவிக்கின்றனர்.மேலும் அந்த சமூக வலைதள பதிவுகளில் விரைவில் மாபெரும் போராட்டம் நடைபெற உள்ளதாகவும், மேலும் எங்கள் ஊரில் மதுக்கடை வேண்டாம் எனவும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.அதுமட்டுமின்றி மதுபோதையில் இருசக்கர வாகனத்தை இயக்கி வரும் சமூக சீர்கேடுவாதிகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அனைவரும் ஹெல்மெட் அணிந்து பயணிக்குமாறு சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!
More like this
அதிரையில் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் பேரிடர் மீட்புக்குழுக்கள் அறிவிப்பு!
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் கடலோர பகுதியான அதிராம்பட்டினத்தில்...
அதிரையில் நாளை மின்தடை ரத்து : மின்வாரியம் அறிவிப்பு!
அதிராம்பட்டினத்தில் துணை மின் நிலையத்தில் நாளை 27/11/24 புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாளை அறிவிக்கப்பட்டிருந்த...
நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. அதிரையில் தொடர் மழை!
தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது....