அதிராம்பட்டினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் 27 வார்டுகளில் போட்டியிடுகின்றனர்.
வேட்புமனு தாக்கல் நேற்றை தினம் முடிவடைந்தது. தேர்தல்காண பிரச்சாரத்தை திமுக கூட்டணி , அதிமுக கூட்டணி , OSK கூட்டணி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் 24 வது வார்டியில் திமுக கூட்டணியின் பேராதரவு பெற்ற மமகவின் வேட்பாளர் அ. அப்துல் மாலிக் உதய சூரியன் சின்னத்தில் போட்டிடுகிறார்.
அவர் மனு தாக்கல் செய்த பின்னர் அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளர் சந்தித்து கூறியதாவது:
அதிராம்பட்டினம் 24வது வார்டில் பொது மக்களுக்கான எல்லா பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தான் பணியாற்ற போவதாகவும், மேலும் அந்த வார்டில் ” நமக்கான கல்வி” என்ற தலைப்பில் கல்விக்கு முன்னுரிமையும், பசுமை புரட்சியுடன் கூடிய சுகாதார மேம்பாடும், அன்றாட தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களுக்கான பிரச்சனைகள் கோரிக்கைகள் குறித்தும் முதன்மையான நடவடிக்கை மேற்கொள்ள போவதாகவும் , மக்களின் மக்களாக சேகரித்த கோரிக்கைகளை 24வது வார்டும் 24 வாக்குறுதிகளையும் விரைவில் வெளியிடுவேன் என கூறியுள்ளார்.