Monday, April 29, 2024

காரைக்குடி – மானாமதுரை புதிய மின்மயப் பாதையில் முதன்மை தலைமை மின் பொறியாளர் ஆய்வு!

Share post:

Date:

- Advertisement -

காரைக்குடி – மானாமதுரை
ரயில் பாதை பிரிவில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்று விட்டன. இந்த புதிய 61 கிலோமீட்டர் மின்மய ரயில் பாதையில் இன்று வெள்ளிக்கிழமை (28.10.2022) முதன்மை தலைமை மின்சார பொறியாளர் ஏ.கே.சித்தார்த் ஆய்வு செய்தார். அவருடன் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை காரைக்குடி – மானாமதுரை இடையே சிறப்பு ரயில் மூலம் ஆய்வு செய்தனர். இந்த ஆய்விற்கு பிறகு இந்த ரயில் பாதையில் ரயில்களை இயக்குவதற்காக 25000 வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்படும்.

பின்பு சிறப்பு ரயிலில் மின்சார எஞ்சின் பொருத்தப்பட்டு மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த 25000 வோல்ட் மின்சாரம் பாயும் மின் பாதையை நெருங்குவதோ, தொடுவதோ ஆபத்தை விளைவிக்கும் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...