Wednesday, March 18, 2026

துன்பங்கள்

spot_imgspot_imgspot_imgspot_img

அன்னை தந்தை இல்லாமை
அருமை கல்வி கல்லாமை
முன்னோர்ப் பெருமை புரியாமை
முயற்சி செய்யத் தெரியாமை
இன்னும் துன்பம் எதுவென்றால்
இளமை வயதில் விதவையன்றோ
துன்பம் கண்டு துவளாமால்
துணிவு கொண்டு வாழ்வாயே!

வாழ்வில் துன்பம் நீளாது
வறுமை என்றும் தங்காது
தாழ்வு மனம்தான் உன்னெதிரில்
சமரைக் காட்டும் உன்னெதிரி
ஆழ்ந்தச் சிந்தனை வழிகாட்டும்
ஆளும் திறமை நெறியூட்டும்
மூழ்க வைக்கும் துன்பங்கள்
முயன்று விரட்ட நீங்கிடுமே!

நீங்காத் துன்பம் ஏதுமில்லை
நின்று வென்றால் தீதுமில்லை
வாங்கும் கடனால் தொல்லைகள்
வட்டித் தீட்டும் எல்லைகள்
தாங்க முடியாத் துன்பங்கள்
தானாய் வருமா இன்னல்கள்?
ஏங்க வைக்கும் தீமைகளாம்
எல்லாம் உன்றன் கைகளாலே!

ஆக்கம்:

கவியன்பன் கலாம்

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img