Tuesday, March 24, 2026

துடிப்பு

spot_imgspot_imgspot_imgspot_img

கருப்பையில் துவங்கும் துடிப்பு
காலமே நிறுத்தும் துடிப்பு
மருத்துவர் அறியும் துடிப்பு
மனிதனின் வாழ்க்கைத் துடிப்பு

குருதியின் ஓட்டம் துடிப்பு
கோபமும் காட்டும் துடிப்பு
சுருதியும் குறைந்தால் இழப்பு
சொல்வது இதயத் துடிப்பு

நேசமும் கண்டால் துடிப்பு
நெருங்கிடும் வேளை துடிப்பு
மோசமும் கண்டால் துடிப்பு
மொத்தமும் இழந்தால் துடிப்பு

மகிழ்ச்சியில் வேகத் துடிப்பு
மனம்நிறை நிதானத் துடிப்பு
நெகிழ்ச்சியில் ஓசைத் துடிப்பு
நிமிடமும் மாறும் துடிப்பு

தூங்கினால் சீராம் துடிப்பு
சோர்வினால் குறையும் துடிப்பு
தாங்கிடும் உயிரே துடிப்பு
சார்ந்துள மூச்சே துடிப்பு

ஆக்கம்:
கவியன்பன் கலாம்

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img