Wednesday, March 18, 2026

அதிரையில் வெறிபிடித்தழையும் தெரு நாய்கள் – ஆக்ரோச கடியால் ஆட்டின் தலையை துண்டாக்கிய கொடூரம் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் CMPலைன் புதுமனை தெருக்களில் ஏராளமான வீடுகளில் ஆடுமாடு கோழி வளர்த்து வருகிறார்கள்.

இவர்களின் கால்நடைகள் அப்பகுதியில் மேய்ந்து விட்டு மாலை நேரங்களில் வீடு திரும்பிவிடும்.

இதனிடையே அகோர பசியில் அலைந்து திரியும் வெறிப்பிடித்த தெரு நாய்கள் ஆடு கோழிகளை வேட்டையாடி விடுகின்றன.

இதனால் சிறு முதலீட்டில் கால்நடைகளை பராமரித்து வரும் விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி வருகிறார்கள்.

அதன்படி இன்று மாலை ஒரு ஆட்டினை கடித்து குதறிய இரண்டு தெரு நாய்கள் தலையை துண்டித்து ருசித்திருக்கிறது.

இதனை பார்த்த அப்பகுதி இளைஞர் ஒருவர் நாய்களை விரட்டி இருக்கிறார்.

நகராட்சி நிர்வாகமே !

நாளுக்கு நாள் அதிகருக்கும் தெரு நாய் கடிகளில் இருந்து மக்களையும், கால் நடைகளையும் காக்க வேண்டும் வெறிபிடித்து திரியும் தெரு நாய்களை கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.என்றும் நாய்கள் காப்பகம் ஏதுமிருந்தால் அங்கு கொண்டு சென்று விட அரசு முன் வர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img