Saturday, May 18, 2024

தஞ்சை தொகுதிக்கு யார் – காக்கையாரின் கச்சித கணக்கு ?

Share post:

Date:

- Advertisement -

கஜாவுக்கு பின்னர் காணாமல் போன அரசியலை கணிக்கும் காக்கையார் கடந்த வாரம் ஊருல வட்டமடிச்டிருக்கு ஹஜ் பெருநாள் அதுவுமா கறி திண்ண ஆசபட்டு வந்த காக்கையை…கட்டிப்போட்டு விஷயத்தை கறந்திருக்கு உள்ளூரு காக்க்கை ஒன்று !

அந்த காக்கை என்னா சொன்னிச்சி…. ம்ஹும் என கிராக்கி காட்ட ஒரு முறுக்கு பாக்கட்ட வாங்கி கொடுத்து வ்ஷயத்தை வாங்கி இருக்கு உள்ளுரின் மற்றொரு அண்டாங்காக்கை….

அதாவது வருகிற 2024ல் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தல்ல SSP கைய காட்டுற ஆளுக்குத்தான் சீட்டு எனவும், அதுக்காக இப்பவே அறிவாலயத்தை வட்டமிடும் படலத்தை தஞ்சை உபிக்கள் செய்து வர்ராங்களாம்…

இன்னொருபக்கம் கூட்டணி கட்சியான் காங்கிரசுக்கு ஒதுக்க கட்சி தலைமை அழுத்தம் கொடுக்குதாம்….இப்போ இருக்குற சூழ்நிலைகயில காங்கிரசுக்கு கொடுக்குகிறதுதான் பெட்டர் என மூத்த உபிக்கள் கருதுகிறார்களாம்…

குறிப்பா சொல்லனும்னா… சிறைவாசிகள் விடுதலையில திமுகவின் மொளனம் சிறுபான்மை இஸ்லாமியர்களை திமுக வெறுப்பு நிலைக்கு கொண்டு சென்று விட்டதாகவும் சிறுபான்மையினர் வாக்குகள் நிறைந்த தொகுதிகளை கூட்டணிக்கு கொடுக்க கருப்பு சிகப்பு கட்சி ஆலோசனையில் உள்ளதாக கூறப்படுகிறதாம்…

குறிப்பாக 2024 காங்கிரசுக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டாக வாய்ப்பு என்பதால், மத்தியில் இடம்பிடிக்க திமுக இம்முறை காங்கிரசின் மகுடிக்கு தலையாட்டும் என்பதையும் சூசகமாக சொல்லிருக்கு அரசியலின் அண்டாங்காக்கை….

எது எப்படியோ…விடியலின் விளிம்பு கூட படாத தமிழக இஸ்லாமியர்கள், வரும் நாடாளுமன்ற தேர்தலில்  யாருக்கு வாக்களிக்க போகிறார்கள் என்பதை போகப்போகப் தெரிந்து கொள்ளலாம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...