Sunday, February 1, 2026

அதிரை : சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு – அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்த சோகம் !

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் B.com மூன்றாம் ஆண்டு பயின்று வந்துள்ளார் ஃபவாஸ் வயது 19.

இந்நிலையில் இன்றைய தினம் காலை 11மணியளவில் அதிரை எரிப்புறக்கரை சாலையில் சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவர் மீது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதாக கூறப்படுகிறது.

இதில் மாணவர் முஹம்மது ஃபவாஸ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளார், இதனை கண்ட அப்பகுதி மக்கள் அவசர சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.

அதிரை மாணவனின் மரண சம்பவம் அதிரை மக்கள் மத்தியில் பெரும் அதிர்வையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img