அதிரை SSM குல் முஹம்மது நினைவு 24 ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
லீக் தொடர் போட்டிகள் நான்கு நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்த நிலையில், இன்று நான்காவது காலிறுதி போட்டியில் அதிரை AFFA – கலைவாணர் 7’S கண்டனூர் அணிகள் மோதியது.
இந்த SSMG கால்பந்து தொடர் போட்டியில் பலமுறை வெற்றிக்கோப்பைய வென்ற பலம் வாய்ந்த கண்டனூர் அணியை வென்றால் மட்டுமே அரையிறுதிக்குள் நுழைய முடியும் என்கிற இக்கட்டான சூழலில், தனது அணி வீர்களின் மீதுள்ள நம்பிக்கையில் களமிறங்கியது அதிரை AFFA அணி.
போட்டி துவங்கியதிலிருந்தே இரு அணி வீரர்களும் முதல் கோல் அடித்து முன்னிலை பெற முனைப்பு காட்டி விரைந்த போதும், சீரான இடைவெளியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை அதிரை AFFA அணி பயன்படுத்திக் கொண்டு முதல் கோல் அடித்து முதல் பகுதி நேர அட்டம் வரை முன்னிலை பெற்றது.
இதன் பின்னர் நடைபெற்ற இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில், கண்டனூர் அணி உத்வேகத்துடன் கோல் போட முன்னேறினாலும் அதனை அதிரை AFFA அணி வீரர்கள் கூட்டு முயற்சியால் தடுத்து நிறுத்தினர். இறுதியில் முன்னாள் சாம்பியன் கலைவாணர் 7’S கண்டனூர் அணியை 1 – 0 என கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதியில் அடியெடுத்து வைத்துள்ளது அதிரை AFFA அணி. இதனால் உள்ளூர் கால்பந்தாட்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.








