Thursday, March 19, 2026

நோட்டாவோடுதான் தேசியக் கட்சிகளுக்குப் போட்டி!’ – தம்பிதுரை 

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழலாம். அதனால், எந்த நேரத்திலும் சட்டமன்றத் தேர்தல் வரலாம் என்ற நிலை பல மாதங்களாக நீடித்துவருகிறது. இந்தக் காரணத்தால், உள்ளூர் கட்சிகள் முதல் தேசியக் கட்சிகள் வரை அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டுவருகின்றன. மறுபக்கம், ரஜினி, கமல்ஹாசன், விஷால் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நேரடி அரசியலில் குதித்துள்ளனர். மாநிலத்தில் சூழல் இப்படி இருக்கையில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, `தேசியக் கட்சிகள் நோட்டாவோடுதான் போட்டிபோட முடியும்’ என்று கிண்டலாகக் கருத்து தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், `தமிழகத்தில் திராவிட கலாசாரத்தை யாராலும் அழிக்க முடியாது. தமிழகத்தில் தேசியக்கட்சிகளுக்கு இடம் கிடையாது. தேசியக் கட்சிகள் நோட்டாவுடன்தான் போட்டியிட முடியும். திரைத்துறையிலிருந்து சினிமாவுக்கு வரும் அனைவரும் எம்.ஜி.ஆர் ஆகிவிடமுடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பதவிக்காக எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வரவில்லை, சமூக நீதியை நிலைநாட்டவே வந்தார். தற்போது, திரைத்துறையிலிருந்து நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஏன் என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள்’ என்று ஆவேசமாகப் பேசியுள்ளார். சமீபத்தில் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க, நோட்டாவைவிட குறைவான வாக்குகள் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img