Monday, December 1, 2025

அமீரக மனிதநேய கலாச்சாரப் பேரவை(MKP) நடத்திய இஃப்தார் விருந்து நிகழ்ச்சி ! தமீமுன் அன்சாரி எம்எல்ஏ பங்கேற்பு !!

spot_imgspot_imgspot_imgspot_img

ஐக்கிய அரபு அமீரகம் துபையில் மனிதநேய கலாச்சார பேரவை (MKP)யின் சார்பில் நோன்பு துறப்பு இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

அமீரக MKPயின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெரும் எழுச்சியோடு மக்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வு நடைபெற்ற அரங்கத்தின் நுழைவாயிலுக்கு தூத்துக்குடியில் ‘ஸ்டெர்லைட்’ ஆலைக்கு எதிராக போராடிய 13 பேரில், வாயில் துப்பாக்கி சூட்டுக்கு ஆளாகி உயிர் துறந்த 17 வயது சகோதரி ‘ஸ்னோலின்’ பெயரை சூட்டியிருந்தனர்.

அதுபோல, அரங்கத்திற்கு காவி தீவிரவாதிகளால் காஷ்மீரில் கூட்டுக் கற்பழிப்புக்கு ஆளாகி இறந்த அன்பு குழந்தை ஆஃசிபாவின் பெயரை சூட்டியிருந்தனர்.

நோன்பு துறப்புக்கு முன்பாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிர் துறந்த தியாகிகளுக்கு மரியாதை செய்யும் வகையில் 1 நிமிடம் எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர்.

இந்த மூன்று நிகழ்வுகளும் தேசத்தை கடந்து வாழும் இந்தியர்களிடம் ஏற்பட்டிருக்கும் வலிமையான அரசியல் தாக்கத்தை உணர்த்தும் வகையில் இருந்தது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA சிறப்பு விருந்தினராக பங்கேற்று தமிழக அரசியல் குறித்து சிறப்புரையாற்றினார். பிறகு துண்டு சீட்டுகள் மூலம் மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

6 மணிக்கெல்லாம் கூட்ட அரங்கம் நிறைந்து. அரங்கத்திற்க்கு வெளியில் மக்கள் திரண்டிருந்தனர். நோன்பு திறப்பதறக்கு ஏற்பாடு செய்திருந்த அரங்கிலும் மக்கள் உட்கார்ந்திருந்தனர். 7 மணி நெருங்கியதும் அந்த ஹோட்டலில் எல்லா பகுதிகளிலும் இளைஞர்கள் கூட்டம் திணர தொடங்கியது.

பிறகு நோன்பு துறப்பு நடைப்பெற்றதோடு, ஒரே நேரத்தில் திரண்ட மக்களுக்கு, MKP தொண்டர் அணியினர் கூடுதல் உணவுப் பொருள்களை வரவழைத்து வினியோகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ஷேக்தாவூத் மரைக்காயர், சுல்தான் ஆரிபீன், சாகுல் ஹமீது, குத்தாலம் அஷ்ரப் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.

‘இறைவனிடம் கையேந்துங்கள்’ என்ற பாடலை தோப்புத்துறை ஹாஜா பாடி, பரவசப்படுத்தினார். தாயகத்தில் இருந்து வருகை தந்திருந்த மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக் மஜகவின் அரசியல் அனுகு முறைகள் குறித்து விளக்க உரையாற்றினார்.

இந்நிகழ்வில் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களும் வருகை தந்து மஜக பொதுச்செயலாளரை சந்தித்து அவரது சட்டமன்ற பணிகளுக்கு வாழ்த்து கூறினர்.

நிகழ்ச்சி முடிந்தப்பிறகு தமீமுன் அன்சாரி எம்எல்ஏ சுமார் 1மணி நேரம் நின்றுக் கொண்டே அனைவருக்கும் போட்டோ எடுக்க அனுமதி கொடுத்தார். இளைஞர்கள் வரிசையில் நின்று அவரோடு பேரார்வத்தோடு படம் எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அமீரக செயலாளர் அப்துல் காதர், பொருளாளர் அஷ்ரப் அலி, துணை செயலாளர்கள் அப்துல் ரசாக், அபுல் ஹசன், அசாலி அகமது, ஆமீரக ஊடக செயலாளர் ஜியாவுல் ஹக், மண்டல செயலாளர்கள் துபாய் ரகமத்துல்லா, ஷார்ஜா யூசுப்தீன், அபுதாபி தைய்யூப், அல் அய்ன் இம்ரான், மண்டல பொருளாளர்கள் துபாய் ஷபீக், ஷார்ஜா பிலால், அபுதாபி காஜாமைதீன், அப்பாஸ் முகம்மது மற்றும் பல்வேறு பொறுப்புகளில் இருப்பவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கித்தனர்.

நிறைவாக நிகழ்ச்சி எழுச்சியோடு நடைபெற காரணமாக இருந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் பொதுச்செயலாளர் அவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...

ASDO – UAE எழுவர் கால்பந்து போட்டியில் அதிரை அணி...

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 02/02/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ASDO - UAE எழுவர் கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில் அதிரை, நாகூர்,...
spot_imgspot_imgspot_imgspot_img