Monday, December 1, 2025

அதிரையில் அரசு பணம் 50 லட்சம் வீண் !! அலட்சியம் காட்டும் அதிகாரிகள்!!!

spot_imgspot_imgspot_imgspot_img

 

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட நடுத்தெருவில் அமைந்துள்ள செட்டியார் குளம், கடந்த காலங்களில் கழிவு நீர் குளமாக காட்சியளித்தது, இதனால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவியது.

இதனை அடுத்து நமது அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி தளம் “அதிரையில் ஒரு சின்ன அமேசான் காடு கண்டுபிடிப்பு” என்ற தலைப்பில் காணொளி காட்சி தொகுப்பை உள்ளது உள்ளபடி வெளியிட்டு மக்கள் மத்தியில் இக்குளத்தின் தூய்மையின் அவசியத்தை எடுத்து சென்றது.

இதன் காரணமாக சுறுசுறுப்பான மாவட்ட நிர்வாகம் முன்னதாக ஒதுக்கீடு செய்யப்பட்ட ₹50 இலட்சத்தை கொண்டு மேற்கண்ட குளத்தை புனரமைப்பு செய்ய டெண்டர் விடப்பட்டு வேலைகள் முடுக்கி விடப்பட்டது , இதன் பின்னர் அசுர வேகத்தில் பணிகள் முடிவடைந்தன.

ஆனால் இந்த குளத்தில் நீர் நிரப்ப குழாய்கள் பதிக்காமல் அரைகுறையாக பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன. இதனால் அக்குளத்திற்கு ஆற்று நீர் வரவில்லை.

இந்நிலையில் அவ்வழியாக செல்லும் கழிவு நீர் கால்வாயை சமூக விரோதிகள் யாரோ உடைத்து கழிவுநீரை மீண்டும் குளத்திற்குள் நிரப்பி வருகின்றனர்.

இதன் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயமும், அக்குளத்தில் உற்பத்தியாகும் கொசுவால் டெங்கு உள்ளிட்ட அபாயகரமான நோய்கள் தாக்கும் சூழலும் உள்ளது.

எனவே மேற்கண்ட குளத்தை புனரமைப்பு செய்து மீண்டும் நன்னீர் குளமாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன், சமூக விரோத செயலில் ஈடுபட்ட நபரை கண்டறிந்து உரிய நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்.

புதிய காணொளி காட்சி பழைய நிலைமைக்கு வருகிறது அதிரை செட்டியன் குளம்

 

அதிரையில் ஒரு சின்ன அமேசான் காடு கண்டுபிடிப்பு” என்ற தலைப்பில் காணொளி காட்சி

https://youtu.be/K1UHWGm25P8

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img