Thursday, March 19, 2026

அதிரை ரயில் நிலையத்தில் ஆய்வு செய்த தெற்கு ரயில்வேயின் உயர் அதிகாரிகள் !!(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த சில மாதங்களாக ரயில் நிலையம் அமைக்கும் கட்டுமானப் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பணி இன்னும் சில வாரங்களில் முடிவடைய இருக்கின்றது.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை ரயில் நிலைய கட்டுமான பணியை முதல் கட்ட ஆய்வு செய்வதற்காக ரயில்வேயின் உயர் அதிகாரிகள் அடங்கிய குழு அதிரை வந்தது.

பட்டுக்கோட்டை முதல் அதிராம்பட்டினம் ரயில் நிலையம் வரையில் நடைபெற்று வரும் அகல ரயில் பாதை பணியிணை, தெற்கு ரயில்வே சென்னை மண்டல(எழும்பூர்) கட்டுமானப் பிரிவின் முதன்மை பொறியாளர் P.காளிமுத்து இன்று(23/06/2018) சனிக்கிழமை அதிரை ரயில் நிலையடத்திற்கு வந்து நேரில் ஆய்வு செய்தார். பின்பு அதிரை ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் முறையாக நடைபெருகின்றதா ? என்றும் ஆய்வு செய்தார்.

பின்னர் நமது அதிரை எக்ஸ்பிரஸ் நிருபரிடம் அவர் கூறியது : பட்டுக்கோட்டை முதல் திருவாரூர் வரையிலான அகல ரயில் பாதை பணிகள் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன’ என்றார்.

ஆய்வின் போது , தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு முதன்மை துணை பொறியாளர் சாம்சங் விஜயகுமார் , கட்டுமானப் பிரிவு உதவி நிர்வாக பொறியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img